இந்த பருவத்தில் மட்டும் (ஜனவரி முதல் தற்போது வரை)கோ- 4, கோ -5 விதைக்கரனைகள் தென்னிந்தியா முழுக்க மற்றும் மலேசியாவுக்கும் வழங்கினோம், ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கால்நடை விவசாய நண்பர்களுக்கும் மிக்க நன்றி.
முகநூல் மற்றும் whatsapp மட்டுமே ஒரு சில அறிவிப்புகளை வழங்கியிருந்தோம்.
எங்கள் பணியில் குறைகள் இருந்தால் நண்பர்களின் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
இனிவரும் காலங்களில் (மே மாதம் ) வெப்பம் உச்சத்தை அடையும் என்பதால் ஒரு மாதம் கழித்துதான் (ஜீன் மாதம்) கோ-4,5 நடவு செய்யலாம்.ஆகையால் ஜீன் மாதத்திற்கு பிறகு விதைக்கரனை தேவையுள்ளவர்கள் தற்போது முன்பதிவு செய்து கொண்டால் , நாங்கள் தயார் ஆகிவிடுவோம்.
கோ-4,5 தீவனத்தைக் கால்நடைகளுக்கு வழங்க 45 முதல் 50 நாட்களுக்குள் அறுவடை செய்துவிடுவோம்.விதைக்கரனையாக வழங்க வேண்டும் என்றால் குறைந்தது 85 வரை வளர்க்க வேண்டும், ஆகையால் தற்போது தயார் ஆனால்தான் ஜீன் மாதம் விதைக்கரனை வழங்க முடியும். முன்பதிவு செய்து கொண்டு தரமான விதைக்கரனை பெற்று கால்நடை செல்வங்களை வளப்படுத்துவோம்! நாமும் பொருளாதார வளம் சேர்ப்போம்!!
ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டு இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் நன்றி! மேலும் கால்நடை பண்ணைக்கு அனைத்து விதைகளும் கிடைக்கும்.