Skip to main content

Posts

Showing posts with the label cofs 29

கால்நடைகள் வளர்ப்பில் பசுந்தீவனப் புரட்சி.

விவசாய நாடாக விளங்கும் நமது இந்தியாவில் கால்நடைப் பராமரிப்பை கிராமப்புறங்களில்  மூலத்தொழிலாகவும், சில பிரிவினர் துணைத் தொழிலாகவும் மேற்கொண்டுள்ளனர். உயர்ரகப் பசுக்களைப் பராமரித்து அதிக அளவு பால் உற்பத்தியைப் பெருக்கி வருகிறோம். ஏழைகளின் பசு என்றழைக்கப்படும் வெள்ளாடு பராமரிப்பால், குறைந்த முதலீட்டில் அதிக அளவு லாபம் பெறலாம். ஆடுகள் பராமரிப்பதற்கு ஆகும் செலவு மற்ற கால்நடைப் பண்ணைகளின் முதலீடுகளைக் காட்டிலும் மிகக்குறைவு. ஓர் ஆட்டிலிருந்து ஓராண்டுக்குக் கிடைக்கும் சாணமும், சிறுநீரும் அரை ஏக்கர் நிலத்துக்கு உரமாக்கப் போதுமானது. வேகமாக வளரும் தன்மையுடைய இறைச்சிக்கோழிகள் பண்ணை மூலம் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம். ÷ஒரு தேசத்தின் மாண்பும், நற்பண்பின் வளர்ச்சியும் அந்த நாட்டின் கால்நடைகளைப் பேணுவதிலிருந்து அறிய முடியும் என மகாத்மா காந்தியடிகள் கூறியதன் மூலம் கால்நடைப் பராமரிப்பின் சிறப்பை உணர முடிகிறது. ÷பெருகிவரும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்பவும், மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்பவும், அதிகரித்துவரும் மக்கள் நெருக்கடிக்கு ஏற்பவும் இப்போதைய சூழலில் விவசாய நிலங்கள் எல்லாம் வீட்ட...

கால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை(கோ எப் எஸ் 29)

இந்தியாவில் கால்நடைகளின் எண்ணிக்கை அயல்நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு தீவனப் பற்றாக்குறையும் மிக முக்கியமான காரணமாகும். தற்போது கால்நடைகளுக்கு 70 முதல் 75 சதவிகிதம் வரை பசுந்தீவனப் பற்றாக்குறை உள்ளது. கால்நடைகளின் உடல் வளர்ச்சி, பால், இறைச்சி உற்பத்தி, இனப் பெருக்கத் திறன், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றுக்கு பசுந்தீவனம் அளிப்பது மிகவும் இன்றியமையாததாகும்.                                        (புகைப்படம்- கோவைப்பல்கலைக்கழகம்) கால்நடைகள் பசுந்தீவனங்களை விரும்பி உண்பதால் அவை உட்கொள்ளும் அளவு அதிகரித்து நல்ல உடல் வளர்ச்சி பெறுகிறது. பசுந்தீவனங்களில் அதிக அளவிலுள்ள புரதம், தாது உப்புகள் மற்றும் உயிர்ச்சத்துக்கள் கால்நடைகளின் உடல் வளர்ச்சிக்கும், பால், இறைச்சி உற்பத்திக்கும், இனப் பெருக்கத் திறனுக்கும் பெரிதும் உதவுகின்றன. அத்துடன் செரிமானத் திறனை அதிகப்படுத்துவதுடன் மட்டுமில்லாமல் கால்நடைகளின் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகின்றன. பசுந்தீவனங்களைக...