Skip to main content

Posts

Showing posts with the label ko5

கோ 4, கோ 5 புல் கரனை விற்பனைக்கு (ko 4 grass,ko 5 grass)

குறிப்பாக மழைக்காலம் இனி தீவரமாக இருக்கும் என்பதால் பயிர்களின் வளர்ச்சிக்கு மிகச்சாதகமாக இருக்கும், இயற்கையாகவே மழை மற்றும் சத்துக்கள் அதிகாமாக கிடைப்பதால் மிகச்சிறந்த முளைப்புத்திறம் மற்றும் அதிக விளைச்சலும் கிடைக்கும். பராமரிப்பது எளிதாக இருக்கும். அதாவது நீர்ப்பாய்ச்சுவதும், உரமிடுவதும் இனி வரும் மழைக்காலத்தில் அதிகம் தேவைப்படாது. இவ்வேளையை இயற்கையே பார்த்துக்கொள்ளும். ஆகையால் விவசாயிகள் இனிவரும் ஆடிப்பட்டத்தில் தீவனப்பயிர்களை புதிதாக நடவு செய்யலாம். மேற்கண்ட புகைப்படங்கள் காவேரி பண்ணையில் சில நாட்களுக்கு முன் எடுத்தது. தற்போது எங்கள் பண்ணையில் கால்நடை பண்ணையாளர்கள்/ நண்பர்களுக்கு வழங்க தயார் ஆகிக்கொண்டுள்ள கோ-4, கோ-5 தீவனக்கரனைகள் புகைப்படங்கள் கீழே. கோ-4, கோ-5 தீவனக்கரனைகளுக்கு முன்பதிவுகள் செய்ய தொடர்புகொள்ளவும் நண்பர்களே.

குறைந்த பரப்பில் அதிக பசும்தீவன உற்பத்தி நுட்பம்.

எங்கள் பண்ணையில் ஒரு பரிசோதனை முயற்சியாக கால்நடைகளுக்கான தீவனபயிர் விவசாயமுறையில் செய்து பார்த்தோம்.சிறப்பாக உள்ளதை அனுபவமாக உணர்கிறோம். ஏனைய கால்நடைப்பண்ணையாளர்களும் இதை முயற்சிக்கலாம். கோ-4 அல்லது கோ-5 தீவனப்பயிர் விவசாயம் செய்யும் நிலத்தில் 3 முதல் 3.5 அடி பார் எடுத்து விவசாயம் செய்வோம்.இதன் இடையில் 1 முதல் 1.5 அடி இடைவெளியில் வேலிமசால் விவசாயம் செய்யலாம் இது சிறப்பாக பலன் கொடுக்கிறது. பொதுவாக கோ-4 அல்லது கோ-5 விவசாயம் செய்ய மேற்கண்ட இடைவெளியைத்தான் அனைவரும் பின்பற்றுவார்கள்.அதுதான் சிறப்பும் கூட.ஆகையால் அந்த அளவு இடைவெளியில் பார்களுக்கு இடையே வேலிமசால் நடவுசெய்யும் போது எவ்விதத்திலும் கோ-4 தீவனத்தின் வளர்ச்சி பாதிப்பதில்லை. மேலும் கோ-4 வேலிமசால் வளர்ச்சியையும் எவ்விதத்திலும் பாதிப்பதில்லை. ஆகையால இரண்டும் சிறப்பாக வளர்கிறது. உதாரணத்திற்கு 1 ஏக்கரில் கோ- 4 பயிரிடும் போது நமக்கு கிடைக்கும் திவனத்தின் அளவு எப்போதும் போல் கிடைப்பதுடன் கூடுதலாக வேலிமசால் சுமார் ½ ஏக்கர் அளவிற்கு கிடைக்கிறது. இதனால் கிடைக்கும் பலன்கள்: ·         ...

கோ 4 புல் கரனை விற்பனைக்கு (ko 4 grass)

இந்த பருவத்தில் மட்டும் (ஜனவரி முதல் தற்போது வரை)கோ- 4, கோ -5 விதைக்கரனைகள் தென்னிந்தியா முழுக்க மற்றும் மலேசியாவுக்கும் வழங்கினோம், ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கால்நடை விவசாய நண்பர்களுக்கும் மிக்க நன்றி. முகநூல் மற்றும் whatsapp மட்டுமே ஒரு சில அறிவிப்புகளை வழங்கியிருந்தோம். எங்கள் பணியில் குறைகள் இருந்தால் நண்பர்களின் விமர்சனங்களை வரவேற்கிறோம். இனிவரும் காலங்களில் (மே மாதம் ) வெப்பம் உச்சத்தை அடையும் என்பதால் ஒரு மாதம் கழித்துதான் (ஜீன் மாதம்) கோ-4,5 நடவு செய்யலாம்.ஆகையால் ஜீன் மாதத்திற்கு பிறகு விதைக்கரனை தேவையுள்ளவர்கள் தற்போது முன்பதிவு செய்து கொண்டால் , நாங்கள் தயார் ஆகிவிடுவோம். கோ-4,5 தீவனத்தைக் கால்நடைகளுக்கு வழங்க 45 முதல் 50 நாட்களுக்குள் அறுவடை செய்துவிடுவோம்.விதைக்கரனையாக வழங்க வேண்டும் என்றால் குறைந்தது 85 வரை வளர்க்க வேண்டும், ஆகையால் தற்போது தயார் ஆனால்தான் ஜீன் மாதம் விதைக்கரனை வழங்க முடியும். முன்பதிவு செய்து கொண்டு தரமான விதைக்கரனை பெற்று கால்நடை செல்வங்களை வளப்படுத்துவோம்! நாமும் பொருளாதார வளம் சேர்ப்போம்!! ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டு இருக்கும் அனைத்து ந...