Skip to main content

Posts

Showing posts with the label co 5

கால்நடைகள் வளர்ப்பில் பசுந்தீவனப் புரட்சி.

விவசாய நாடாக விளங்கும் நமது இந்தியாவில் கால்நடைப் பராமரிப்பை கிராமப்புறங்களில்  மூலத்தொழிலாகவும், சில பிரிவினர் துணைத் தொழிலாகவும் மேற்கொண்டுள்ளனர். உயர்ரகப் பசுக்களைப் பராமரித்து அதிக அளவு பால் உற்பத்தியைப் பெருக்கி வருகிறோம். ஏழைகளின் பசு என்றழைக்கப்படும் வெள்ளாடு பராமரிப்பால், குறைந்த முதலீட்டில் அதிக அளவு லாபம் பெறலாம். ஆடுகள் பராமரிப்பதற்கு ஆகும் செலவு மற்ற கால்நடைப் பண்ணைகளின் முதலீடுகளைக் காட்டிலும் மிகக்குறைவு. ஓர் ஆட்டிலிருந்து ஓராண்டுக்குக் கிடைக்கும் சாணமும், சிறுநீரும் அரை ஏக்கர் நிலத்துக்கு உரமாக்கப் போதுமானது. வேகமாக வளரும் தன்மையுடைய இறைச்சிக்கோழிகள் பண்ணை மூலம் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம். ÷ஒரு தேசத்தின் மாண்பும், நற்பண்பின் வளர்ச்சியும் அந்த நாட்டின் கால்நடைகளைப் பேணுவதிலிருந்து அறிய முடியும் என மகாத்மா காந்தியடிகள் கூறியதன் மூலம் கால்நடைப் பராமரிப்பின் சிறப்பை உணர முடிகிறது. ÷பெருகிவரும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்பவும், மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்பவும், அதிகரித்துவரும் மக்கள் நெருக்கடிக்கு ஏற்பவும் இப்போதைய சூழலில் விவசாய நிலங்கள் எல்லாம் வீட்ட...

கோ- 4,கோ-5 சாகுபடு முறைகள்.( எளிமையான சுருக்கமான வடிவில்)

1.    கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல் கோ (க.நே) 4 2.    கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல்லின் சிறப்பியல்புகள் 3.    நிலம் தயாரித்தல் 4.    உர நிர்வாகம் 5.    நடவு செய்தல் 6.    களை நிர்வாகம் 7.    நீர் நிர்வாகம் 8.    பயிர் பாதுகாப்பு 9.    அறுவடை கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல் கோ (க.நே) 4 கால்நடை வளர்ப்பானது உழவுத் தொழிலின் உப தொழிலாக இருப்பதோடு மனிதர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்குகின்ற இன்றியமையாத வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது. பொதுவாக கால்நடைகளுக்கு வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை, மக்காச்சோளத்தட்டை மற்றும் பிற பயிர்களின் செடிகள் உணவாக கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மேற்கண்ட தீவனங்கள் கால்நடைகளுக்கு போதுமான ஊட்டச்சத்தினை அளிப்பதில்லை. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினால் 2008ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கால்நடை வளர்ப்பதற்கு உகந்த தீவன புல் வகையான கோ 4 (கம்பு நேப்பியர்) ஒட்டுப்புல்லினை தீவனமாக கொடுப்பதன் மூலம் கால்நடைகளுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்தினை அள...

தீவனப்புல் கோ-4 மற்றும் கோ- 5 ஒர் ஒப்பீடு!

அறிவியல் பூர்வமான அட்டவனை ஒப்பீட்டு பட்டியல் கட்டுரையின் கீழே இணைத்துள்ளேன். அதில் கோ-3 முதல் கோ-5 வரை ஒப்பீட்டு பட்டியல் உள்ளது. அதை நாம் பார்க்கும் போதே ஒவ்வொன்றுக்குமான வித்தியாசத்தை   எளிமையாக நாம் புரிந்துகொள்ளலாம். அப்பட்டியல் அறிவியல் பூர்வமானது ஆகும்.            நண்பர்களே நான் உங்களிடம் பகிர உள்ளது. நடைமுறையில் அது நமது பண்ணையில் எப்படி உள்ளது என்பதைத்தான். எங்களது பண்ணையை பல ஆண்டுகளாக தமிழகத்தில் பல ஆயிரம் கால்நடை பண்ணையாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் தெரியும் என்பதாலும் பல ஆயிரம் பேர் ஆலோசனைகளும் பயிற்சியும் எடுத்துக்கொண்ட இடம் என்பதாலும் எங்களை நன்கு அறிவீர்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையை எழுதுகிறேன்.      என்னதான் நமது பல்கலைக்கழகங்கள் சொன்னாலும் அது நமது நடைமுறைக்கு சரியாக உள்ளதா? என்று பார்க்க வேண்டும். அவ்வாறு தமிழகம் முழுக்க உள்ள பண்ணையாளர்கள் அனைவருக்கும் ஏற்ற ஒன்றாக இருக்குமானால் அது வெற்றி அடையும்.      அதுபோல் புதுவரவான கோ-5 தீவன ஒட்டுப்புல் சில ...