அறிவியல்
பூர்வமான அட்டவனை ஒப்பீட்டு பட்டியல் கட்டுரையின் கீழே இணைத்துள்ளேன். அதில் கோ-3 முதல்
கோ-5 வரை ஒப்பீட்டு பட்டியல் உள்ளது. அதை நாம் பார்க்கும் போதே ஒவ்வொன்றுக்குமான வித்தியாசத்தை
எளிமையாக நாம் புரிந்துகொள்ளலாம். அப்பட்டியல்
அறிவியல் பூர்வமானது ஆகும்.
நண்பர்களே நான் உங்களிடம் பகிர உள்ளது. நடைமுறையில்
அது நமது பண்ணையில் எப்படி உள்ளது என்பதைத்தான். எங்களது பண்ணையை பல ஆண்டுகளாக தமிழகத்தில்
பல ஆயிரம் கால்நடை பண்ணையாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் தெரியும் என்பதாலும் பல ஆயிரம்
பேர் ஆலோசனைகளும் பயிற்சியும் எடுத்துக்கொண்ட இடம் என்பதாலும் எங்களை நன்கு அறிவீர்கள்.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையை எழுதுகிறேன்.
என்னதான் நமது பல்கலைக்கழகங்கள் சொன்னாலும் அது
நமது நடைமுறைக்கு சரியாக உள்ளதா? என்று பார்க்க வேண்டும். அவ்வாறு தமிழகம் முழுக்க
உள்ள பண்ணையாளர்கள் அனைவருக்கும் ஏற்ற ஒன்றாக இருக்குமானால் அது வெற்றி அடையும்.
அதுபோல் புதுவரவான கோ-5 தீவன ஒட்டுப்புல் சில
ஆண்டுகளுக்கு முன் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டது. நாங்களும் எமது பண்ணையில்
பயிறிட்டோம். அந்த அனுபவத்தைத்தான் கூறுகிறேன். ஏற்கனவே ஒரு ஏக்கருக்கும் மேல் கோ-4
பயிறிட்டு கால்நடைகளுக்கு உணவாக கொடுத்து வருகிறோம். கூடுதலாக கோ-5 தீவனப்புல்லும்
அரைஏக்கரில் பயிரிடப்பட்டது.
இதில் முதல் வித்தியாசம்
கோ-5 எங்களுக்கு வழங்கிய விவசாயிடம் மிக உயரமாகவும், மெல்லிய கரனையாகத்தான் கிடைத்தது.
நடவின் போதே சரியாக முளைப்புத்திறம் இருக்காது என்பதால் அதிக இடைவெளி இல்லாமல் அடர்த்தியாகத்தான்
நடவு செய்தோம் (நீளவாக்கில்).ஆனால் சில வாரங்களில்
எங்களுக்கு ஆச்சரியம் மிகச்சிறப்பான முளைப்புத்திறன் இருந்தது.
முக்கியமாக கரனை
சேதப்பட்டு இருந்தாலும் (முளைப்பு வரும் கனுப்பகுதி தவிர) முளைத்தது.அதாவது கரனையை
சமப்பாகமாக இரண்டாக கிழித்து போட்டது கூட முளைத்திருந்ததுதான் ஆச்சரியம்.
மேலும் மற்றொறு
சிறப்பு அதன் தண்டின் மிருதுத்தன்மை மற்றும் கூடுதல் இனிப்புத்தன்மை. இதனால் கால்நடைகள்
தண்டுப்பகுதியை கழிக்காமல் பெரும்பாலும் முழுவதும் சாப்பிடுகின்றன. இதன் மூலம் கழிவுகள்
மீறுவதில்லை.உண்ணும் அளவும் கூடுகிறது.
புரதச்சத்து
கோ-4 ரை விட கோ-5 ல் 1.25% கூடுதலாக உள்ளது. இரண்டு புல்லும் ஏக்கருக்கு கிடைக்கும்
அளவில் பெரிய வித்தியாசம் இல்லை.
சிறப்பியல்புகள்
விவரங்கள்
|
கோ 3
|
கோ (க.நே) 4
|
கோ (பிஎன்) 5
|
பெற்றோர்
|
கம்பு பிடி
1697 xபென்னிசெட்டம் பர்பூரியம்சிற்றினங்களுக்கிடையே
தோன்றியது
|
கம்பு கோ
8 x எப்.டி 461 சிற்றினங்களுக்கிடையே தோன்றியது
|
கம்பு IP
20594 x எப்.டி 437 சிற்றினங்களுக்கிடையே தோன்றியது
|
வயது (நாட்கள்)
|
பல்லாண்டு
தாவரம்
|
பல்லாண்டு
தாவரம்
|
பல்லாண்டு
தாவரம்
|
பசுந்தீவன்
மகசூல் (டன்/எக்டர்/வருடம்)
|
350 (7 அறுவடைகளில்)
|
375-400
(7 அறுவடைகளில்)
|
360 (7 அறுவடைகளில்)
|
உருவ
இயல்புகள்
|
|||
செடியின்
உயரம் (செ.மீ)
|
300 –
360
|
400-500
|
400-500
|
இலைகளின்
எண்ணிக்கை
|
400-450
|
400-450
|
400-430
|
தூர்களின்
எண்ணிக்கை
|
30 – 40
|
30 – 40
|
30 – 40
|
இலை தண்டு
விகிதம்
|
0.70
|
0.71
|
1.02-1.19
|
இலை நீளம்
(செ.மீ)
|
80 – 95
|
110-115
|
100-110
|
இலை அகலம்
(செ.மீ)
|
3.0 –
4.2
|
4.0-5.0
|
4.0-5.0
|
தர
இயல்புகள்
|
|||
உலர் பொருட்கள்
மகசூல் (டன்/எக்டர்/வருடம்)
|
65.12
|
79.87
|
80
|
புரதச்சத்து
(டன்/எக்டர்)
|
5.40
|
8.71
|
9.6
|
உலர் பொருட்கள்
(%)
|
17.0
|
21.3
|
22
|
புரதச்சத்து
(%)
|
10.5
|
10.71
|
12
|
ஆக்ஸலேட்
(%)
|
2.51
|
2.48
|
2.4
|
சாகுபடிக்குறிப்புகள்
: கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ(சிஎன்) 4/ கோ(பிஎன்)5
|
|||||||||||||||||||||||||||||||||||||||
(அட்டவனை உதவி:- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்)
ஆகவே நிறைவாக கோ-4
ரை விட கோ-5 பல சிறப்பம்சங்கள் உள்ளதால் கால்நடைப் பண்ணையாளர்கள் நிச்சயமாக கோ-5 பயிரிடலாம்,
பலன்களை கூட்டலாம்.
குறிப்பு: இந்த
சிறு கட்டுரையை நண்பர்கள் பலர் என்னிடம் கேட்ட கேள்விகள் கேட்டதால் எழுத தூண்டியது.
அவர்களுக்கு நன்றி.
சார்,
ReplyDeleteநான் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் வசிக்கிறேன் எனக்கு கோ 5 தீவன புல் கரனை தேவைபடுகிறது எங்கே கிடைக்கும் போன் நோ இருந்தால் எனது 9952819741 என்ற நம்பருக்கு sms அனுப்புங்க சார்
சகோ கீழ்கண்ட முகவரியில் கிடைக்கும்.
ReplyDeleteதொடர்பு எண்,முகவரி
94889 32336 ம.வேலாயுதம், வண்ணான்குடிகாடு, தெ.வ.புத்தூர்(அஞ்சல்), விருத்தாசலம்(தாலுக்கா), கடலூர் மாவட்டம், தமிழ்நாடு. E Mail: kaverigoatform@gmail.com
We want co 5
ReplyDeleteஎனக்கு வீதை தேவை தூத்துக்குடி
ReplyDeleteஎனக்கு வீதை தேவை தூத்துக்குடி
ReplyDeleteSir எனக்கு வீதை அனுப்ப முடியுமா சொல்லுங்க 9498195245
ReplyDeleteஎனக்கு கோ 5 விதை தேவை 9442888450
ReplyDeleteஎனக்கு கோ 5 விதை தேவை 9442888450
ReplyDeleteஎனக்கு கோ5 புல் கருணை தேவை 6380282967
ReplyDeleteஎனக்கு கோ5 புல் கருணை தேவை 7339625253
ReplyDelete