Skip to main content

தீவனப்புல் கோ-4 மற்றும் கோ- 5 ஒர் ஒப்பீடு!

அறிவியல் பூர்வமான அட்டவனை ஒப்பீட்டு பட்டியல் கட்டுரையின் கீழே இணைத்துள்ளேன். அதில் கோ-3 முதல் கோ-5 வரை ஒப்பீட்டு பட்டியல் உள்ளது. அதை நாம் பார்க்கும் போதே ஒவ்வொன்றுக்குமான வித்தியாசத்தை  எளிமையாக நாம் புரிந்துகொள்ளலாம். அப்பட்டியல் அறிவியல் பூர்வமானது ஆகும்.


     
     நண்பர்களே நான் உங்களிடம் பகிர உள்ளது. நடைமுறையில் அது நமது பண்ணையில் எப்படி உள்ளது என்பதைத்தான். எங்களது பண்ணையை பல ஆண்டுகளாக தமிழகத்தில் பல ஆயிரம் கால்நடை பண்ணையாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் தெரியும் என்பதாலும் பல ஆயிரம் பேர் ஆலோசனைகளும் பயிற்சியும் எடுத்துக்கொண்ட இடம் என்பதாலும் எங்களை நன்கு அறிவீர்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையை எழுதுகிறேன்.

     என்னதான் நமது பல்கலைக்கழகங்கள் சொன்னாலும் அது நமது நடைமுறைக்கு சரியாக உள்ளதா? என்று பார்க்க வேண்டும். அவ்வாறு தமிழகம் முழுக்க உள்ள பண்ணையாளர்கள் அனைவருக்கும் ஏற்ற ஒன்றாக இருக்குமானால் அது வெற்றி அடையும்.

     அதுபோல் புதுவரவான கோ-5 தீவன ஒட்டுப்புல் சில ஆண்டுகளுக்கு முன் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டது. நாங்களும் எமது பண்ணையில் பயிறிட்டோம். அந்த அனுபவத்தைத்தான் கூறுகிறேன். ஏற்கனவே ஒரு ஏக்கருக்கும் மேல் கோ-4 பயிறிட்டு கால்நடைகளுக்கு உணவாக கொடுத்து வருகிறோம். கூடுதலாக கோ-5 தீவனப்புல்லும் அரைஏக்கரில் பயிரிடப்பட்டது.

      இதில் முதல் வித்தியாசம் கோ-5 எங்களுக்கு வழங்கிய விவசாயிடம் மிக உயரமாகவும், மெல்லிய கரனையாகத்தான் கிடைத்தது. நடவின் போதே சரியாக முளைப்புத்திறம் இருக்காது என்பதால் அதிக இடைவெளி இல்லாமல் அடர்த்தியாகத்தான் நடவு செய்தோம் (நீளவாக்கில்).ஆனால் சில வாரங்களில் எங்களுக்கு ஆச்சரியம் மிகச்சிறப்பான முளைப்புத்திறன் இருந்தது.

       முக்கியமாக கரனை சேதப்பட்டு இருந்தாலும் (முளைப்பு வரும் கனுப்பகுதி தவிர) முளைத்தது.அதாவது கரனையை சமப்பாகமாக இரண்டாக கிழித்து போட்டது கூட முளைத்திருந்ததுதான் ஆச்சரியம்.
மேலும் மற்றொறு சிறப்பு அதன் தண்டின் மிருதுத்தன்மை மற்றும் கூடுதல் இனிப்புத்தன்மை. இதனால் கால்நடைகள் தண்டுப்பகுதியை கழிக்காமல் பெரும்பாலும் முழுவதும் சாப்பிடுகின்றன. இதன் மூலம் கழிவுகள் மீறுவதில்லை.உண்ணும் அளவும் கூடுகிறது.

     புரதச்சத்து கோ-4 ரை விட கோ-5 ல் 1.25% கூடுதலாக உள்ளது. இரண்டு புல்லும் ஏக்கருக்கு கிடைக்கும் அளவில் பெரிய வித்தியாசம் இல்லை.

சிறப்பியல்புகள்

விவரங்கள்
கோ 3
கோ (க.நே) 4
கோ (பிஎன்) 5
பெற்றோர்
கம்பு பிடி 1697 xபென்னிசெட்டம் பர்பூரியம்சிற்றினங்களுக்கிடையே தோன்றியது
கம்பு கோ 8 x எப்.டி 461 சிற்றினங்களுக்கிடையே தோன்றியது
கம்பு IP 20594 x எப்.டி 437 சிற்றினங்களுக்கிடையே தோன்றியது
வயது (நாட்கள்)
பல்லாண்டு தாவரம்
பல்லாண்டு தாவரம்
பல்லாண்டு தாவரம்
பசுந்தீவன் மகசூல் (டன்/எக்டர்/வருடம்)
350 (7 அறுவடைகளில்)
375-400 (7 அறுவடைகளில்)
360 (7 அறுவடைகளில்)
உருவ இயல்புகள்
செடியின் உயரம் (செ.மீ)
300 – 360
400-500
400-500
இலைகளின் எண்ணிக்கை
400-450
400-450
400-430
தூர்களின் எண்ணிக்கை
30 – 40
30 – 40
30 – 40
இலை தண்டு விகிதம்
0.70
0.71
1.02-1.19
இலை நீளம் (செ.மீ)
80 – 95
110-115
100-110
இலை அகலம் (செ.மீ)
3.0 – 4.2
4.0-5.0
4.0-5.0
தர இயல்புகள்
உலர் பொருட்கள் மகசூல் (டன்/எக்டர்/வருடம்)
65.12
79.87
80
புரதச்சத்து (டன்/எக்டர்)
5.40
8.71
9.6
உலர் பொருட்கள் (%)
17.0
21.3
22
புரதச்சத்து (%)
10.5
10.71
12
ஆக்ஸலேட் (%)
2.51
2.48
2.4

சாகுபடிக்குறிப்புகள் : கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ(சிஎன்) 4/ கோ(பிஎன்)5



பருவம்
:
ஆண்டு முழுவதும்
மண்
:
எல்லா மண் வகைகளுக்கும் ஏற்றது
நிலம் தயாரித்தல்
:
2 முதல் 3 முறை உழவு செய்து நிலத்தைப் பண்படுத்தி 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்
உர அளவு (எக்டருக்கு)

அடியுரம் தொழு உரம்-25 டன்கள் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 75: 50:40 கிலோ/ எக்டர்
மேலுரம்
:
75 கிலோ தழைச்சத்து நட்ட 30ம் நாளில்
75 கிலோ தழைச்சத்து ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும்
கரணை அளவு
:
எக்டருக்கு 33,333 தண்டு கரணைகள்
இடைவெளி
:
60 x 50 செ.மீ
களை நிர்வாகம்
:
தேவைப்படும் போது
பயிர்ப்பாதுகாப்பு
:
பொதுவாகத் தேவையில்லை
நீர் நிர்வாகம்
:
நடவின் போதும் மற்றும் மூன்றாவது நாளில், பின்பு தேவைக்கேற்றபடி
விதை அறுவடை
:
விதைத்த 110-125 நாட்களில் அறுவடை செய்யலாம்.
அறுவடை
:
முதல் அறுவடை 75-80 வது நாட்களிலும், மற்ற அறுவடைகள் 45 நாட்களுக்கு ஒரு முறை
பசுந்தீவன மகசூல்

375 -400 டன்கள் / எக்டர் / ஆண்டு (7 அறுவடைகள்)

(அட்டவனை உதவி:- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்)

ஆகவே நிறைவாக கோ-4 ரை விட கோ-5 பல சிறப்பம்சங்கள் உள்ளதால் கால்நடைப் பண்ணையாளர்கள் நிச்சயமாக கோ-5 பயிரிடலாம், பலன்களை கூட்டலாம்.

குறிப்பு: இந்த சிறு கட்டுரையை நண்பர்கள் பலர் என்னிடம் கேட்ட கேள்விகள் கேட்டதால் எழுத தூண்டியது. அவர்களுக்கு நன்றி.



Comments

  1. சார்,

    நான் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் வசிக்கிறேன் எனக்கு கோ 5 தீவன புல் கரனை தேவைபடுகிறது எங்கே கிடைக்கும் போன் நோ இருந்தால் எனது 9952819741 என்ற நம்பருக்கு sms அனுப்புங்க சார்

    ReplyDelete
  2. சகோ கீழ்கண்ட முகவரியில் கிடைக்கும்.
    தொடர்பு எண்,முகவரி
    94889 32336 ம.வேலாயுதம், வண்ணான்குடிகாடு, தெ.வ.புத்தூர்(அஞ்சல்), விருத்தாசலம்(தாலுக்கா), கடலூர் மாவட்டம், தமிழ்நாடு. E Mail: kaverigoatform@gmail.com

    ReplyDelete
  3. எனக்கு வீதை தேவை தூத்துக்குடி

    ReplyDelete
  4. எனக்கு வீதை தேவை தூத்துக்குடி

    ReplyDelete
  5. Sir எனக்கு வீதை அனுப்ப முடியுமா சொல்லுங்க 9498195245

    ReplyDelete
  6. எனக்கு கோ 5 விதை தேவை 9442888450

    ReplyDelete
  7. எனக்கு கோ 5 விதை தேவை 9442888450

    ReplyDelete
  8. எனக்கு கோ5 புல் கருணை தேவை 6380282967

    ReplyDelete
  9. எனக்கு கோ5 புல் கருணை தேவை 7339625253

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேலி மசால் தீவன சாகுபடி முறை( எளிமையான சுருக்கமான வடிவில்).

1.   வேலி மசால் தீவன பயிரின் சிறப்பியல்புகள் 2.    பருவம் 3.    நிலம் தயாரித்தல் 4.    உர நிர்வாகம் 5.    விதை நேர்த்தி 6.    களை நிர்வாகம் 9   நீர் நிர்வாகம் 10    இலைவழி தெளிப்பு உரமிடுதல் 11.   பயிர் பாதுகாப்பு 12   அறுவடை 13.   விதை சேமிப்பு வேலி மசால் கால்நடைகளுக்குத் தீவனமாக புல்வகை தீவனப் பயிர்களைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பயறு வகை தீவனப் பயிர்களையும் கொடுத்தால்தான் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். ஆடு மாடுகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு தானிய புல்வகை தீவனப்பயிர்கள் மற்றும் ஒரு பங்கு பயறு வகை தீவனப் பயிர்களும் வழங்கப்படவேண்டும். அதிக புரதச்சத்து கொண்ட வேலி மசாலை கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறையினை போக்க முடியும்.  ( புகைப்படம்: காவேரி பண்ணை ) வேலி மசால் தீவன பயிரின் சிறப்பியல்புகள் ·          பல்லாண்டு தாவரமாக பயிர் செய்யலாம் ·       ...

Super napier seed sale in india and tamilnadu. Rs.1 each

Super Napier Grass Seeds at Rs 1 /each stem(50% offer) The big sale in first time in india from kaveri goat farm, tamilndu. Delivery all over india.  Order now super napier and more detail contact  +9176394 44670, +9194889 32336(Whatsapp). E Mail:  kaverigoatform@gmail.com .  https://www.facebook.com/kaveri.goarfarm Brief notes of super napier. What is Pakchong1 Super Napier ? It is a Hybrid Napier Grass obtained by crossing Elephant Grass and Pearl Millet. What are the advantages of Pakchong1 Super Napier ? The main advantage of Pakchong1 Super Napier are 1. Pakchong1 Super Napier is the only variety in Asia giving highest crude protein (14-18%) 2. Pakchong1 Super Napier can give yield of 200 Tons per acre per year which makes it as “King of Napiers” in Asia. 3. 180 Tons per acre per year means a dairy farmer can easily rear 15 cows in one acre of land. 4. Farmers can save huge money because of high protein content (14-18%). 5. Highly...