எங்கள் பண்ணையை முழுமையாக உங்களுக்கு இங்கு அறிமுகம் செய்வது இந்த சிறு கட்டுரையின் நோக்கம் அல்ல. இங்கு உள்ள சண்டைக்கோழியை உங்களுக்கு அறிமுகம் செய்வதே .எங்கள் காவேரி ஆட்டுப்பண்ணை இயற்கை முறையிலான பண்ணை. இங்கு ஆடுகள்,சண்டைக்கோழி,கடக்நாத கோழிகள், மாடு ஆகியவை பராமரிக்கப்படுகிறது.
கற்றாழையுடன் அசோலா குட்டை.
துளசிச்செடிகள்.
சிறியாநங்கை செடிகள்.
ஆட்டுபாலில் தயாரான பஞ்சகவ்யம் கால்நடைக்காகவும், விவசாயத்திற்கும் தயாரிக்கிறோம்.
குறிப்பு:- பஞ்சகவ்யம் ஒரு உயர்ந்த மருந்துப் பொருள் அதை மனிதர்கள் உட்கொள்ள தனியாக தயார்செய்கிறோம்.இதை பற்றிய ஒரு இடுக்கையை தனியாக எழுதலாம் என்று இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போதும்,அனுபவங்கள் ,குறிப்புகளை தயார் செய்துகொண்டும் பிறகு ஒரு நேரத்தில் உங்களை சந்திக்கிறேன்.தற்போது சொல்ல வந்த செய்துக்கு வருவோம்.
300 அகத்தி மரம், சவுண்டல் மரம் 150, கிளரிசெடியா 65 மரங்கள்,மீதமுள்ள இடங்களில் கோ-4, கோ.எப்.எஸ்-29, வேலிமசால் தீவனத்துக்காக உள்ளது.
அகத்தி மரங்கள்,கோ -4
வேலிமசால்.
இரண்டு ஏக்கரில் மேற்கொண்ட மரம், பண்ணை, கால்நடைக்கான தீவனங்கள் ஆகியவை உள்ளது.
இதில் ஆட்டுப்பண்ணைக்கு அடியிலும் பண்ணையை சுற்றியுள்ள இடத்திலும் நாங்கள் சண்டைக்கோழிகளை வளர்க்கிறோம். இது பண்ணையில் உள்ள கழிவுகள்,அசோலா, ஆட்டுப்புழுக்கையில் உள்ள சிறு உயிரினங்களை உணவாக எடுத்துக்கொண்டு நல்ல ஆரோக்கியமாக வளர்கின்றன.மேலும் தீவனமாக சிறுதானியங்கள்,அரிசி ஆகியவையும் கொடுக்கிறோம்.
குறிப்பிட்ட மாத இடைவெளியில் பஞ்சகவ்யத்தையும் அசிலுக்கு கொடுக்கிறோம்.
குறிப்பிட்ட மாத இடைவெளியில் பஞ்சகவ்யத்தையும் அசிலுக்கு கொடுக்கிறோம்.
இங்கு வளர்ந்து கொண்டுள்ள அசில் (அ) சண்டைக்கோழிகளை இப்போழுது பார்க்கலாம். அவைகளின் புகைப்படங்களை இங்கே வரிசைப்படுத்துகிறோம்.
இவைகள் நாங்கள் வளர்க்கும் அசில் கோழிகளின் சிலவற்றின் புகைப்படங்கள்.இவைகள் விற்பனைக்கு உள்ளது.தேவைப்படும் நண்பர்கள் எங்களை தொடர்புகொள்ளலாம்.
உங்கள் பண்ணையை பார்வை இட அனுமதி உண்டா??
ReplyDeleteஉண்டு.எந்த கட்டுப்பாடும் இல்லை.
ReplyDeleteவணக்கம். தங்களிடம் தற்போது அசில் நாட்டுக் கோழிக் குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளனவா? இருந்தால் அவற்றின் விலை என்ன?
ReplyDelete-பழ.அசோக்குமார், புதுக்கோட்டை- செல்: 7598202902
பஞ்சகவ்யம் கிடைக்குமா?
ReplyDelete