Skip to main content

எங்கள் பண்ணையின் சண்டைக்கோழிகள் (அசில்).

எங்கள் பண்ணையை முழுமையாக உங்களுக்கு இங்கு அறிமுகம் செய்வது இந்த சிறு கட்டுரையின் நோக்கம் அல்ல. இங்கு உள்ள சண்டைக்கோழியை உங்களுக்கு அறிமுகம் செய்வதே .எங்கள் காவேரி ஆட்டுப்பண்ணை இயற்கை முறையிலான பண்ணை. இங்கு ஆடுகள்,சண்டைக்கோழி,கடக்நாத கோழிகள், மாடு ஆகியவை பராமரிக்கப்படுகிறது.

இங்கு மூலிகைகள், அசோலா ஆகியவைகள் பண்ணையில் உள்ள கால்நடைகளுக்காக வளர்க்கப்படுகிறது.



கற்றாழையுடன் அசோலா குட்டை.


துளசிச்செடிகள்.



சிறியாநங்கை செடிகள்.


ஆட்டுபாலில் தயாரான பஞ்சகவ்யம் கால்நடைக்காகவும், விவசாயத்திற்கும் தயாரிக்கிறோம்.

குறிப்பு:- பஞ்சகவ்யம் ஒரு உயர்ந்த மருந்துப் பொருள் அதை மனிதர்கள் உட்கொள்ள தனியாக தயார்செய்கிறோம்.இதை பற்றிய ஒரு இடுக்கையை தனியாக எழுதலாம் என்று இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போதும்,அனுபவங்கள் ,குறிப்புகளை தயார் செய்துகொண்டும் பிறகு ஒரு நேரத்தில் உங்களை சந்திக்கிறேன்.தற்போது சொல்ல வந்த செய்துக்கு வருவோம்.

300 அகத்தி மரம், சவுண்டல் மரம் 150, கிளரிசெடியா 65 மரங்கள்,மீதமுள்ள இடங்களில் கோ-4, கோ.எப்.எஸ்-29, வேலிமசால்  தீவனத்துக்காக  உள்ளது.



          அகத்தி மரங்கள்,கோ -4




                      வேலிமசால்.


இரண்டு ஏக்கரில் மேற்கொண்ட மரம், பண்ணை, கால்நடைக்கான தீவனங்கள் ஆகியவை உள்ளது.

இதில் ஆட்டுப்பண்ணைக்கு அடியிலும் பண்ணையை சுற்றியுள்ள இடத்திலும் நாங்கள் சண்டைக்கோழிகளை வளர்க்கிறோம். இது பண்ணையில் உள்ள கழிவுகள்,அசோலா, ஆட்டுப்புழுக்கையில் உள்ள சிறு உயிரினங்களை உணவாக எடுத்துக்கொண்டு நல்ல ஆரோக்கியமாக வளர்கின்றன.மேலும் தீவனமாக சிறுதானியங்கள்,அரிசி ஆகியவையும் கொடுக்கிறோம்.

குறிப்பிட்ட மாத இடைவெளியில் பஞ்சகவ்யத்தையும் அசிலுக்கு கொடுக்கிறோம்.

இங்கு வளர்ந்து கொண்டுள்ள அசில் (அ) சண்டைக்கோழிகளை இப்போழுது பார்க்கலாம். அவைகளின் புகைப்படங்களை இங்கே வரிசைப்படுத்துகிறோம்.















இவைகள் நாங்கள் வளர்க்கும் அசில் கோழிகளின் சிலவற்றின் புகைப்படங்கள்.இவைகள் விற்பனைக்கு உள்ளது.தேவைப்படும் நண்பர்கள் எங்களை தொடர்புகொள்ளலாம்.

தொடர்பு எண்,முகவரி

94889 32336 ம.வேலாயுதம், வண்ணான்குடிகாடு, தெ.வ.புத்தூர்(அஞ்சல்), விருத்தாசலம்(தாலுக்கா), கடலூர் மாவட்டம், தமிழ்நாடு. E Mail: kaverigoatform@gmail.com

https://www.facebook.com/kaveri.goarfarm

Comments

  1. உங்கள் பண்ணையை பார்வை இட அனுமதி உண்டா??

    ReplyDelete
  2. உண்டு.எந்த கட்டுப்பாடும் இல்லை.

    ReplyDelete
  3. வணக்கம். தங்களிடம் தற்போது அசில் நாட்டுக் கோழிக் குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளனவா? இருந்தால் அவற்றின் விலை என்ன?
    -பழ.அசோக்குமார், புதுக்கோட்டை- செல்: 7598202902

    ReplyDelete
  4. பஞ்சகவ்யம் கிடைக்குமா?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேலி மசால் தீவன சாகுபடி முறை( எளிமையான சுருக்கமான வடிவில்).

1.   வேலி மசால் தீவன பயிரின் சிறப்பியல்புகள் 2.    பருவம் 3.    நிலம் தயாரித்தல் 4.    உர நிர்வாகம் 5.    விதை நேர்த்தி 6.    களை நிர்வாகம் 9   நீர் நிர்வாகம் 10    இலைவழி தெளிப்பு உரமிடுதல் 11.   பயிர் பாதுகாப்பு 12   அறுவடை 13.   விதை சேமிப்பு வேலி மசால் கால்நடைகளுக்குத் தீவனமாக புல்வகை தீவனப் பயிர்களைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பயறு வகை தீவனப் பயிர்களையும் கொடுத்தால்தான் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். ஆடு மாடுகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு தானிய புல்வகை தீவனப்பயிர்கள் மற்றும் ஒரு பங்கு பயறு வகை தீவனப் பயிர்களும் வழங்கப்படவேண்டும். அதிக புரதச்சத்து கொண்ட வேலி மசாலை கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறையினை போக்க முடியும்.  ( புகைப்படம்: காவேரி பண்ணை ) வேலி மசால் தீவன பயிரின் சிறப்பியல்புகள் ·          பல்லாண்டு தாவரமாக பயிர் செய்யலாம் ·       ...

தீவனப்புல் கோ-4 மற்றும் கோ- 5 ஒர் ஒப்பீடு!

அறிவியல் பூர்வமான அட்டவனை ஒப்பீட்டு பட்டியல் கட்டுரையின் கீழே இணைத்துள்ளேன். அதில் கோ-3 முதல் கோ-5 வரை ஒப்பீட்டு பட்டியல் உள்ளது. அதை நாம் பார்க்கும் போதே ஒவ்வொன்றுக்குமான வித்தியாசத்தை   எளிமையாக நாம் புரிந்துகொள்ளலாம். அப்பட்டியல் அறிவியல் பூர்வமானது ஆகும்.            நண்பர்களே நான் உங்களிடம் பகிர உள்ளது. நடைமுறையில் அது நமது பண்ணையில் எப்படி உள்ளது என்பதைத்தான். எங்களது பண்ணையை பல ஆண்டுகளாக தமிழகத்தில் பல ஆயிரம் கால்நடை பண்ணையாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் தெரியும் என்பதாலும் பல ஆயிரம் பேர் ஆலோசனைகளும் பயிற்சியும் எடுத்துக்கொண்ட இடம் என்பதாலும் எங்களை நன்கு அறிவீர்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையை எழுதுகிறேன்.      என்னதான் நமது பல்கலைக்கழகங்கள் சொன்னாலும் அது நமது நடைமுறைக்கு சரியாக உள்ளதா? என்று பார்க்க வேண்டும். அவ்வாறு தமிழகம் முழுக்க உள்ள பண்ணையாளர்கள் அனைவருக்கும் ஏற்ற ஒன்றாக இருக்குமானால் அது வெற்றி அடையும்.      அதுபோல் புதுவரவான கோ-5 தீவன ஒட்டுப்புல் சில ...

Super napier seed sale in india and tamilnadu. Rs.1 each

Super Napier Grass Seeds at Rs 1 /each stem(50% offer) The big sale in first time in india from kaveri goat farm, tamilndu. Delivery all over india.  Order now super napier and more detail contact  +9176394 44670, +9194889 32336(Whatsapp). E Mail:  kaverigoatform@gmail.com .  https://www.facebook.com/kaveri.goarfarm Brief notes of super napier. What is Pakchong1 Super Napier ? It is a Hybrid Napier Grass obtained by crossing Elephant Grass and Pearl Millet. What are the advantages of Pakchong1 Super Napier ? The main advantage of Pakchong1 Super Napier are 1. Pakchong1 Super Napier is the only variety in Asia giving highest crude protein (14-18%) 2. Pakchong1 Super Napier can give yield of 200 Tons per acre per year which makes it as “King of Napiers” in Asia. 3. 180 Tons per acre per year means a dairy farmer can easily rear 15 cows in one acre of land. 4. Farmers can save huge money because of high protein content (14-18%). 5. Highly...