தமிழகத்து பண்ணையாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நண்பர் இராம்குமார் முகவை அவர்கள் ஆட்டுச்சங்கம் குழுமம் {Goat Association Board} -ல் கேட்டுள்ள கேள்வி.
//என்னுடைய ஆடு மற்றும் கோழிப்பண்ணைக்கு மின் இணைப்புக் கேட்டு மின்சார வாரிய அலுவலகம் சென்றேன். தொழிலகமாக (சிறுதொழில் மாதிரி) பதிவு செய்தால் யூனிட்டுக்கு 3 ரூபாய் தான் இல்லைன்னா வணிகப் பயன்பாடாகக் கருதி 9 ரூபாய் வரை யூனிட்டுக்கு கணக்கிடுவோம்னு சொல்லிட்டாங்க.
ஆனா அரசின் எந்தத் துறையில் என் பண்ணையைப் பதிவு செய்யணும்னு தெரியலை. மாவட்டத் தொழில் மையத்தில் உற்பத்தி சார்ந்த தொழிலை மட்டுமே பதிவு செய்வோம் வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு வேறு அமைப்புகள்ட்ட கேளுங்கன்னு பதில் வந்தது. தகவல் தெரிந்தவர்கள் உதவுங்கள்.//
DEPARTMENT OF INDUSTRIES AND COMMERCE http://www.msmeonline.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து
pdf கோப்பாக தறவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இத்தளத்தில்
தாங்கள் சிறு,குறு தொழில் செய்து பொருட்களை உற்பத்தி செய்தால் பதிவுசெய்து
கொள்ளலாம்.ஆனால் நாம் உயிருள்ள கால்நடைகளை வளர்ப்பதால் அதற்கான தெரிவு வரும்போது
மற்றவை (others) என்று தெரிவு செய்து கொள்ள வேண்டியதுதான்.
//Jakir
Hussain எணக்கும் இதை பற்றிய விளக்கம் தேவை தேடி தேடி களைத்து விட்டேண்//
என்று கூறியிள்ளார். அதற்கான விளக்கம் கிழே.
தங்கள் பண்ணை இருக்கும் இடத்துக்கு
உட்பட்ட உதவிமின்
பொறியாளர் , உதவி செயற்பொறியாளர் அவர்களை சந்தித்து தாங்களின் கோரிக்கையை , அதாவது
மின்சாரத்துறையில் வெளியிட்டுள்ள jäoeehL ä‹rhu
xG§FKiw Miza« ä.k. v© 1/2013 Miz¤ nj 20-06-2013 –ன் நகலுடன் கோரிக்கை கடிதத்தை தேதியிட்டு வழங்கலாம் அல்லது பதிவுத்தபாலில்
அனுப்பலாம். நேரில் வழங்கும் போது ஒப்புமை பெற்றுக்கொள்ளவும். கடிதத்தின் மீது நடவடிக்கை
எடுக்கவில்லை என்றால் ஒப்புகை சீட்டு அல்லது கடிதத்தின் நகல் மூலம் மேல் முறையீட்டை
தலைவர்,
மின்
நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம்,
மேற்பார்வையாளர்
பொறியாளர்,
கடலூர்
மின்பகிர்மான வட்டம்,
-----------------------
மாவட்டம்
என்ற முகவரிக்கு அனுப்பவும்.
(இங்கு எனது மாவட்டத்தை நான் குறிப்பிட்டுள்ளேன்
தாங்கள் உங்கள் மாவட்டத்தை குறிப்பிட்டுக்கொள்ளவும். முழு முகவரியும் தாங்களின் உதவிமின்
பொறியாளர் , உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தெரிந்து கொண்டு அனுப்பலாம்.)
மேற்கண்ட அலுவலகம் நீதிமன்றம் போல் செயல்படும் இத்துறை
சார்ந்த அலுவலகம் ஆகும். ஆகவே இங்கு தாங்களின் கோரிக்கைக்கு உடனடியாக தீர்க்க தக்க
வழிகாட்டுதலை உதவிமின் பொறியாளர் , உதவி செயற்பொறியாளர் ஆகியோருக்கு வழங்கப்படும்.
மேலும் தாங்களுக்கு நேரில் தங்கள் குறையை கூறவும்
,வழிகாட்டவும் குறிப்பிட்ட தேதி,நேரம் இட்டு கடிதமும் வழங்குவார்கள். மேற்பார்வையாளர்
பொறியாளர், அவர்கள் மாதத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட வாரத்தில் உதவி செயற்பொறியாளர்
அலுவலகத்திற்கு குறைகளை தீர்க்கவும், கோரிக்கைகளை நுகர்வோர்களிடம் கேட்கவும் வரும்போது
நேரிலும் தெரிவிக்கலாம்.
நாங்கள் அனுப்பிய புகார் கடிதத்திற்கு மின் நுகர்வோர்
குறை தீர்க்கும் மன்றம், மேற்பார்வையாளர் பொறியாளர், அனுப்பிய பதில் கடிதத்தின் நகல்.
நாங்கள் அனுப்பிய புகார் கடிதத்திற்கு உதவிமின்
பொறியாளர் அனுப்பிய பதில் கடிதத்தின் நகல்.
jäoeehL
ä‹rhu xG§FKiw Miza«
ä‹ c‰g¤Â
k‰W« ä‹g»®khd¤Â‰fhd ä‹ f£lz« ã®zæ¤jš
ä.k.
v© 1/2013
Miz¤
nj 20-06-2013
(21-06-2013
Kjš eilKiwgL¤jš)
மேற்கண்ட ஆணையின் பக்கம் எண் 25 –ல் 6.17.
jhழ்வG¤j
ä‹f£lz« III-A(1)
என்ற தலைப்பின்
கீழ் உள்ள கட்டண வீதம் நமக்கு பொருந்தும். இதன் படி கால்நடை பண்ணையாளர்கள் ரூ3.50 –
4.00 வரை யூனிட்டிற்கு கட்டணம் செலுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேற்கண்ட ஆணையை தற்போது Tamil
Nadu Electricity Regulatory Commission
இணையத்தில் லிங்கில் கோப்பு நீக்கப்பட்டுள்ளது
(அ) கிடைக்கவில்லை.
ஆகையால் அந்த கோப்பை இணைந்துள்ளேன். தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் நண்பர்களே.
சந்தேகங்களுக்கு இமெயில் முகவரியில் தொடர்புகொள்ளவும்.
பண்ணைக்கு இலவசம் மின்சாரம் பகுதி அளவிற்கு பெருவதற்கான
நடைமுறைகளை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
94889 32336 ம.வேலாயுதம், வண்ணான்குடிகாடு, தெ.வ.புத்தூர்(அஞ்சல்), விருத்தாசலம்(தாலுக்கா), கடலூர் மாவட்டம், தமிழ்நாடு. E Mail: kaverigoatform@gmail.com.
0 comments:
Post a Comment