எங்கள் பண்ணையை முழுமையாக உங்களுக்கு இங்கு அறிமுகம் செய்வது இந்த சிறு கட்டுரையின் நோக்கம் அல்ல. இங்கு உள்ள சண்டைக்கோழியை உங்களுக்கு அறிமுகம் செய்வதே .எங்கள் காவேரி ஆட்டுப்பண்ணை இயற்கை முறையிலான பண்ணை. இங்கு ஆடுகள்,சண்டைக்கோழி,கடக்நாத கோழிகள், மாடு ஆகியவை பராமரிக்கப்படுகிறது. இங்கு மூலிகைகள், அசோலா ஆகியவைகள் பண்ணையில் உள்ள கால்நடைகளுக்காக வளர்க்கப்படுகிறது. கற்றாழையுடன் அசோலா குட்டை. துளசிச்செடிகள். சிறியாநங்கை செடிகள். ஆட்டுபாலில் தயாரான பஞ்சகவ்யம் கால்நடைக்காகவும், விவசாயத்திற்கும் தயாரிக்கிறோம். குறிப்பு:- பஞ்சகவ்யம் ஒரு உயர்ந்த மருந்துப் பொருள் அதை மனிதர்கள் உட்கொள்ள தனியாக தயார்செய்கிறோம்.இதை பற்றிய ஒரு இடுக்கையை தனியாக எழுதலாம் என்று இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போதும்,அனுபவங்கள் ,குறிப்புகளை தயார் செய்துகொண்டும் பிறகு ஒரு நேரத்தில் உங்களை சந்திக்கிறேன்.தற்போது சொல்ல வந்த செய்துக்கு வருவோம். 300 அகத்தி மரம், சவுண்டல் மரம் 150, கிளரிசெடியா 65 மரங்கள்,மீதமுள்ள இடங்களில் கோ-4, கோ.எப்.எஸ்-29, வேலிமசால் தீவனத்துக்காக உள்ளது. ...