இந்தியாவில் கால்நடைகளின் எண்ணிக்கை அயல்நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு தீவனப் பற்றாக்குறையும் மிக முக்கியமான காரணமாகும்.

தற்போது கால்நடைகளுக்கு 70 முதல் 75 சதவிகிதம் வரை பசுந்தீவனப் பற்றாக்குறை உள்ளது. கால்நடைகளின் உடல் வளர்ச்சி, பால், இறைச்சி உற்பத்தி, இனப் பெருக்கத் திறன், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றுக்கு பசுந்தீவனம் அளிப்பது மிகவும் இன்றியமையாததாகும்.
                
                      (புகைப்படம்- கோவைப்பல்கலைக்கழகம்)


கால்நடைகள் பசுந்தீவனங்களை விரும்பி உண்பதால் அவை உட்கொள்ளும் அளவு அதிகரித்து நல்ல உடல் வளர்ச்சி பெறுகிறது. பசுந்தீவனங்களில் அதிக அளவிலுள்ள புரதம், தாது உப்புகள் மற்றும் உயிர்ச்சத்துக்கள் கால்நடைகளின் உடல் வளர்ச்சிக்கும், பால், இறைச்சி உற்பத்திக்கும், இனப் பெருக்கத் திறனுக்கும் பெரிதும் உதவுகின்றன. அத்துடன் செரிமானத் திறனை அதிகப்படுத்துவதுடன் மட்டுமில்லாமல் கால்நடைகளின் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகின்றன.

பசுந்தீவனங்களைக் கொடுப்பதால் அதிக அளவு அடர் மற்றும் உலர் தீவனங்களைக் கொடுப்பதைத் தவிர்க்கலாம். இதனால் தீவனச் செலவை மிகவும் குறைக்க முடியும்.
பசுந்தீவனங்கள் அனைத்து பருவ காலங்களுக்கு ஏற்றதாகவும், வறட்சியைத் தாங்கக் கூடியதாகவும், விஷத் தன்மை அற்றதாகவும், தரமானதாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். அத்துடன், பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறன் உடையதாகவும், விதை மற்றும் விதைப் பொருள்கள் மலிவானதாகவும், நல்ல வாசனையுடனும் இருப்பது அவசியம்.
தானியத் தீவனப் பயிர்கள்
தானியத் தீவனப் பயிர்கள் கால்நடை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை தனியாக தீவனத்துக்காக மட்டும் பயிரிடப்படுவதில்லை. தானிய உற்பத்திக்காக பயிரிடப்பட்டு அவற்றை அறுவடை செய்த பின்பு பெறப்படும் பயிர் தண்டுகள் மற்றும் வைக்கோல் ஆகியன தீவனமாக உபயோகப்படுத்தப்படுகிறது. பயிர் தண்டுகள் மற்றும் வைக்கோல் ஆகியவை முக்கியமாக உலர் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. பசுந்தீவனங்களுடன் ஒப்பிடுகையில் இவற்றில் சத்துக்கள் குறைவாகவே காணப்படுகிறது. ஆகவே தானிய வகைப் பயிர்களில் பிரத்யேகமானது தீவன மக்காச்சோளம் சூப்பிரிக்கஸ் மக்காச்சோளம். இவற்றை பயிர்களில் தானியங்களாக தனியாக அறுவடை செய்யாமல் பயிர் முழுவதும் 50 சதவீதம்  பூக்கும் தருவாயில் கால்நடைகளுக்கு உணவாக கொடுக்க வேண்டும்.

தீவனச் சோளம் ( கோ.எப்.எஸ்-29): தீவனச் சோளம் (கோ.எப்.எஸ்-29) என்ற ரகம் உயரமாக வளரும் மற்றும் அதிக தீவன மகசூல் கொடுக்க வல்லது. இறவைப் பயிராகவோ அல்லது மானாவாரியாகவோ இவற்றை பயிரிடலாம் விதைத்து 60 நாள்களில் அறுவடைக்கு தயாராகிறது. ஒரு ஹெக்டருக்கு 25 முதல் 30 கிலோ வரை விதை தேவை. ஹெக்டருக்கு 10 டன் தொழு உரம், 60 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல் சத்து என்ற அளவில் இட வேண்டும். விதைகளை வரிசைக்கு வரிசை 30-40 செ.மீ. இடைவெளியும், செடிக்குச் செடி 10 செ.மீ. இடைவெளிவிட்டு பார்களில் விதைக்கலாம்.

விதைத்தவுடன் முதல் நீர் பாசனமும், பின்னர் 3ஆம் நாள் மறுபாசனமும் பின்பு 10 நாள்களுக்கு ஒரு முறையும் பாசனம் செய்ய வேண்டும். விதைத்த 60 நாள்களிலிருந்து தொடர்ந்து பூக்கும் வரை அறுவடை செய்யலாம். ஆண்டுக்கு 5 முறை அறுவடை செய்யலாம். இதில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளன. சைலேஜ் முறையில் பதப்படுத்துவதற்கு பசுந்தீவன சோளப்பயிரை, சிறுசிறு துண்டுகளாக வெட்டி பக்குவப்படுத்தப்பட்ட முறையில் சேமித்து வைக்கலாம். மேற்கூறிய தீவனச் சோளம் (கோ.எப்.எஸ்-29) பசுந்தீவனப் பயிர்களின் விதைகள் தேனி உழவர் பயிற்சி மையத்தில் கிடைக்கிறது.

கால்நடை வளர்ப்போர் இப்பசுந்தீவனப் பயிர்களை உற்பத்தி செய்து அவர்களுடைய கால்நடைகளுக்கு கொடுப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் விற்பனை செய்து நல்ல பலன் பெறலாம்
ஆதாரம் : உழவர் பயிற்சி மையம், தேனி மாவட்டம். தமிழ்நாடு

 தீவனப் பயிர்கள்
தீவன சோளம் (இறவை)
பயிர் மேம்பாடு

மாவட்டங்கள்
இரகங்கள்
அ. இறவை                                        
ஜனவரி – பிப்ரவரி மற்றும் ஏப்ரல் – மே அனைத்து மாவட்டங்கள்
கோ எஃப் , எஸ் – 29 & கோ 31 (மறுதாம்பு சோளம்)
ஆ. மானாவாரி                                 
ஜுன் – ஜுலை
அனைத்து மாவட்டங்கள்
செப்டம்பர் – அக்டோபர்
அனைத்து மாவட்டங்கள்

சிறப்பியல்புகள்

விவரங்கள்
கோ (எப்.எஸ்) 29
கோ (எப்.எஸ்) 31
பெற்றோர்
டி.என்.எஸ் 30 x சொர்கம் சுடானேன்ஸில் இருந்து பெறப்பட்டது.
Gamma ray (400 Gy) mutant of CO (FS) 29
வயது (நாட்கள்)
மறுதாம்பு வகை
(3 years)
மறுதாம்பு வகை
(3 years)
சராசரி பசிந்தீவன மகசூல் (டன்/எக்டர்)
160-170 (6-7 மறுதாம்புகள்)
190-(6-7மறுதாம்புகள்)
தோற்ற இயல்புகள்
தண்டின் உயரம் (செ.மீ)
220-250
270 - 290
தூர்களின் எண்ணிக்கை
10-15
12-17
இலைகளின் எண்ணிக்கை
80-105
90-110
இலை நீளம் (செ.மீ)
75-90
85 - 95
இலை அகலம் (செ.மீ)
3.5-4.6
4.5 - 5.0
இலை தண்டு வீதம்
0.2-0.25
0.26
தர இயல்புகள்
புரதச்சத்து (%)
8.41
9.86
உலர் பொருள் (%)
23.60
25.9
நார் சத்து (%)
25.60
19.80
ஐ.வி.டி.எம்.டி (%)
50.30
52
குறிப்பு : தீவனச் சோளத்துடன் கோ – 5 மற்றும் கோ – எஃப் சி 8 இரக தட்டைப்பயறை சேர்த்து ஊடு பயிராக பயிர் செய்தால் சத்தான தீவனத்தைப் பெறலாம்.

சாகுபடிக் குறிப்புகள் : தீவனச்சோளம் கோ 31

பருவம்
:
ஆண்டு முழுவதும் இறவைப் பயிராகப் பயிர் செய்யலாம். ஒரு முறை விதைத்து பல முறை அறுவடை செய்யலாம்.
நிலம்
:
நீர் தேங்காத நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
நிலம் தயாரித்தல்
:
2 முதல் 3 முறை உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தில் 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்கவும். உழுவதற்கு முன் எக்டருக்கு 25 டன் தொழுவுரம் இடவும்.
விதை அளவு

5 கிலோ / எக்டர்
இடைவெளி
:
30 x 15 செ.மீ.(விதைகளை பார்களின் இருபுறமும் விதைக்க வேண்டும்)
60 x 15 செ.மீ.(விதை உற்பத்தி செய்வதற்கு)
உரம்(எக்டருக்கு)
:
அடியுரம் 
45:40:40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து
 
மேலுரம்
 
விதைத்த 30 வது நாட்களில் 45 கிலோ யூரியா இட வேண்டும். ஒவ்வொரு ஆண்டு முடிவுக்குப்பின்  45:40:40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து
 
இடவும்.
களை நிர்வாகம்
:
முதல் களை விதைத்த 25-30 நாட்களில் எடுக்கவும். பிறகு தேவைப்படும் போது ஒவ்வொரு அறுவடைக்குப்பின்பும் ஒரு முறை களை எடுத்து உரமிடவும்.
நீர்ப்பாசனம்
:
விதைத்தவுடன் நீர் பாய்ச்சி, மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் கொடுத்த பிறகு 7-10 நாட்களுக்கொருமுறை மண் வகை மற்றும் மழை அளவைப்பொறுத்து நீர் பாய்ச்ச வேண்டும்.
பயிர்ப்பாதுகாப்பு
:
பொதுவாகத் தேவையில்லை
பசுந்தீவன அறுவடை
:
50 விழுக்காடு பூக்கும் தருணத்தில் அறுவடை செய்யலாம். முதல் அறுவடை விதைத்த 65 -70 நாட்களிலும் அடுத்த அறுவடைகள் 50 நாட்களுக்கொருமுறை
விதை அறுவடை
:
விதைத்த 110-125 நாட்களில் அறுவடை செய்யலாம்.
பசுந்தீவன மகசூல்
:
192 டன்கள் / எக்டர்/ ஆண்டு (6-7 அறுவடைகளில்)
விதை மகசூல்

1000 கிலோ / எக்டர்/ ஆண்டு. ஆண்டுக்கு மூன்று முறை அறுவடை செய்யலாம். விதை உறக்க நிலை 45-60 நாட்கள். அதனால் அறுவடைக்குப் பிறகு 60 நாட்கள் கழித்து விதைக்க வேண்டும்

குறிப்பாக மழைக்காலம் இனி தீவரமாக இருக்கும் என்பதால் பயிர்களின் வளர்ச்சிக்கு மிகச்சாதகமாக இருக்கும், இயற்கையாகவே மழை மற்றும் சத்துக்கள் அதிகாமாக கிடைப்பதால் மிகச்சிறந்த முளைப்புத்திறம் மற்றும் அதிக விளைச்சலும் கிடைக்கும். பராமரிப்பது எளிதாக இருக்கும். அதாவது நீர்ப்பாய்ச்சுவதும், உரமிடுவதும் இனி வரும் மழைக்காலத்தில் அதிகம் தேவைப்படாது. இவ்வேளையை இயற்கையே பார்த்துக்கொள்ளும். ஆகையால் விவசாயிகள் இனிவரும் ஆடிப்பட்டத்தில் தீவனப்பயிர்களை புதிதாக நடவு செய்யலாம்.



மேற்கண்ட புகைப்படங்கள் காவேரி பண்ணையில் சில நாட்களுக்கு முன் எடுத்தது.

தற்போது எங்கள் பண்ணையில் கால்நடை பண்ணையாளர்கள்/ நண்பர்களுக்கு வழங்க தயார் ஆகிக்கொண்டுள்ள கோ-4, கோ-5 தீவனக்கரனைகள் புகைப்படங்கள் கீழே. கோ-4, கோ-5 தீவனக்கரனைகளுக்கு முன்பதிவுகள் செய்ய தொடர்புகொள்ளவும் நண்பர்களே.





கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல் கோ (க.நே) 4
கால்நடை வளர்ப்பானது உழவுத் தொழிலின் உப தொழிலாக இருப்பதோடு மனிதர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்குகின்ற இன்றியமையாத வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது. பொதுவாக கால்நடைகளுக்கு வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை, மக்காச்சோளத்தட்டை மற்றும் பிற பயிர்களின் செடிகள் உணவாக கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மேற்கண்ட தீவனங்கள் கால்நடைகளுக்கு போதுமான ஊட்டச்சத்தினை அளிப்பதில்லை. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினால் 2008ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கால்நடை வளர்ப்பதற்கு உகந்த தீவன புல் வகையான கோ 4 (கம்பு நேப்பியர்) ஒட்டுப்புல்லினை தீவனமாக கொடுப்பதன் மூலம் கால்நடைகளுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்தினை அளிக்கலாம். இது தீவனக்கம்பு மற்றும் நேப்பியர் புல் ஆகிய 2 புல் இனங்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது.


 ( புகைப்படம்: மேற்கண்ட தேதியில் கவேரிப் பண்ணையில் எடுத்தது)
கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல்லின் சிறப்பியல்புகள்
·         பெற்றோர் – கம்பு கோ.8 * எப்.டி.461
·         அதிக புரதச் சத்து (10.71%) மற்றும் இனிப்புத் தண்டுகளைக் கொண்டது.
·         அதிக படியான இலை நீளம் (110 – 115 செ.மீ) மற்றும் அகலமுடைய (4 – 5 செ.மீ) இலைகளைக் கொண்டது.
·         அதிக உயரம் (400 – 500 செ.மீ) வரை வளரும்.
·         அதிக (400 – 450 இலைகள்/குத்து) மற்றும் மிருதுவான தன்மை கொண்ட இலைகளை கொண்டது.
·         அதிக இலை தண்டு விகிதம் (0.71)
·         அதிக தூர்கள் (30 – 40/குத்து) மற்றும் சாயாதத் தன்மை உடையது.
·         வருடத்திற்கு ஏழு முதல் எட்டு முறை மறுதாம்பு பயிர் அறுவடை தரக்கூடியது.
·         வருடத்திற்கு ஏக்கருக்கு 150 முதல் 175 டன் வரை தீவன மகசூல் தரக்கூடியது.
·         பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை உடையது.
·         குறைந்த இடத்தில் குறைந்த காலத்தில் அதிக மகசூல் தரக்கூடியது.
·         கணுக்களைக் சுற்றி உருவாகும் வேர்கள் விரைவாக முளைக்க உதவும்.
·         எல்லா மாவட்டங்களுக்கும் பயிரிட ஏற்றது.
பருவம்
இறவை பயிரை ஆண்டு முழுவதும் பயிரிட உகந்தது.
மண் வகை
அனைத்து மண் வகைகளிலும் பயிரிடலாம்.
நிலம் தயாரித்தல்
இரும்பு கலப்பை கொண்டு இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்தல் வேண்டும். பின்பு பார் அமைக்கும் கருவியைக் கொண்டு 60 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.
உர நிர்வாகம்
ஒரு எக்டருக்கு 25 டன் என்ற அளவில் தொழுஉரத்தினை கடைசி உழவிற்கு முன்பு இட்டு நன்கு உழுதல் வேண்டும். ஏக்கருக்கு 60 கிலோ தழைச்சத்து (130 கிலோ யூரியா), 20 கிலோ மணிச்சத்து (125 கிலோ சூப்பர்பாஸ்பேட்) மற்றும் 16 கிலோ சாம்பல்சத்து (27 கிலோ பொட்டாசு) இட வெண்டும். முழு அளவு மணி மற்றும் சாம்பல் சத்தினையும், 50 சதம் தழைச்சத்தினையும் அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள 50 சதம் தழைச் சத்தை நட்ட 30வது நாளில் மேலுரமாக இட வேண்டும். மேலும் ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும், 30 கிலோ தழைச்சத்தை (65 கிலோ யூரியோ) இடுவதால் அதிக தீவன மகசூல் கிடைக்கும். பரிந்துரைக்கப்பட்ட தழை மற்றும் மணிச்சத்தின் அளவின் 75 சதத்துடன் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போக்டீரியம் (ஏக்கருக்கு தலா 800 கிராம்) அல்லது அசோபாஸ் (1600 கிராம்) கலந்து கலவையாக இடும் போது விளைச்சல் அதிகரிப்பதுடன் 25 சதவீதம் உர அளவினைக் குறைக்கலாம்.
பயிர் இடைவெளி
60 செ.மீ * 50 செ.மீ.
விதையளவு
ஏக்கருக்கு 16,000 இருபரு வேர்க்கரணைகள் அல்லது தண்டு கரணைகள் தேவைப்படும். மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட வயதுடைய தண்டுகள் மட்டுமே விதைக் கரணைகளாக பயன்படுத்த வேண்டும்.
நடவு செய்தல்
வயலினை தயார்செய்து நீர் பாய்ச்சிய பின் வேர்க்கரணைகள் அல்லது தண்டுக் கரணைகளை பார்களில் 50 செ.மீ இடைவெளியில் 1 குத்துக்கு ஒரு வேர்கரணை என்ற அளவில் நடவு செய்ய வேண்டும். விதைக் கரணைகளை வயலில் நடும்போது அவை மண்ணுடன் இறுக்கமாக இருக்கும்படி அதனைச் சுற்றியும் காலால் நன்கு மிதித்துவிட வேண்டும். அப்படி செய்யாவிடில் கரணைகள் வேர்பிடிக்காமல் காய்ந்து விடும். கலப்பு பயிராக 3 வரிசைகள் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்லும் ஒரு வரிசை சேலிமசாலும் கலந்து பயிர் செய்வதால் ஊட்டச்சத்தினை அதிகப்படுத்தலாம்.
களை நிர்வாகம்
நடவு நட்ட 30 நாட்களுக்குள் களைகள் இருப்பின் ஆட்களை வைத்து கைக்களை எடுக்க வேண்டும். அதற்கு பிறகு கம்பு நேப்பியர் புல் அடர்த்தியாக வளருவதால் களைகள் முளைப்பதில்லை.
நீர் நிர்வாகம்
விதைக் கரணைகளை நட்டவுடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு மூன்றாவது நாளில் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு மண் மற்றும் கிடைக்கும் மழை அளவினைப் பொறுத்து 8 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். கழிவு நீரையும் நீர்ப்பாசனத்திற்கு பயன்படுத்தலாம்.
மண் அணைத்தல்
முதல் முறையாக நட்ட 30 நாட்களுக்கு பிறகு மண் அணைக்க வேண்டும். பிறகு மூன்று அறுவடைக்கு ஒரு முறை மண் அணைக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
பொதுவாக பூச்சி மற்றும் நோய்கள் கம்புநேப்பியர் ஒட்டுப்புல்லினை தாக்குவதில்லை. எனவே பயிர் பாதுகாப்பு தேவைப்படாது.
அறுவடை
நடவுக்கு பின்னர் 75 முதல் 80 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். பிறகு ஒவ்வொரு 45 நாட்கள் இடைவெளியிலும் அடுத்தடுத்த அறுவடைகள் செய்யலாம். தீவனத்தை அறுவடை செய்யும்போது முடிந்த வரை நிலத்துடன் சேர்த்து அறுவடை செய்வது நல்லது. இரண்டு அல்லது மூன்று அறுவடைக்கு ஒரு முறை காய்ந்த இலை மற்றும் தண்டுப் பகுதியை அகற்றி விட்டு பரிந்துரைக்கப்பட்ட அளவு உரம் இட்டு, நீர் பாய்ச்சுவதன் மூலம் அதிக தூர்கள் வெடிக்கும்.
இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தூர்களின் சுற்றளவை குறைத்து அதிகப்படியான தூர்களை அகற்றுவது நீர்பாய்ச்சுவதற்கு வசதியாக இருக்கும். இதன் மூலம் கிடைக்கும் வேர்க்கரணைகளை புதிதாக நடவு செய்ய பயன்படுத்தலாம். விதைக்கரணைகளை பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட தண்டினை (தண்டின் கணுவில் உள்ள முளைகள் நன்கு முற்றியவுடன்) பயன்படுத்தலாம்.
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்லில் ஆக்சலேட் என்ற நச்சுப் பொருள் அதிகமாக இருக்கும். எனவே இத்தீவனத்துடன் 5 கிலோ பயறு வகை தீவனத்தை கலந்து கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும். அல்லது சுண்ணாம்பு தண்ணீர் அல்லது தாது உப்பு கலவையை கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும்.
ஆதாரம்: கரும்பு ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி

கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்
பருவம் மற்றும் இரகங்கள்
மாவட்டம்/பருவம்
மாதம்
இரகங்கள்
இறவை
எல்லா மாவட்டங்களும்
வருடம் முழுவதும்
கே.கே.எம் 1, கோ 3 மற்றும் கோ (க.நே) 4
சிறப்பியல்புகள்
விவரங்கள்
கே.கே.எம் 1
கோ 3
கோ (க.நே)4
பெற்றோர்
கம்பு IP 15507 x எப்.டி 429 சிற்றினங்களுக்கிடையே தோன்றியது.
கம்பு பிடி 1697 xபென்னிசெட்டம் பர்பூரியம்சிற்றினங்களுக்கிடையே தோன்றியது
கம்பு கோ 8 x எப்.டி 461 சிற்றினங்களுக்கிடையே தோன்றியது
வயது (நாட்கள்)
பல்லாண்டு தாவரம்
பல்லாண்டு தாவரம்
பல்லாண்டு தாவரம்
பசுந்தீவன் மகசூல் (டன்/எக்டர்/வருடம்)
288
350 (7 அறுவடைகளில்)
375-400 (7 அறுவடைகளில்)
உருவ இயல்புகள்
செடியின் உயரம் (செ.மீ)
155-160
300 – 360
400-500
இலைகளின் எண்ணிக்கை
165-170
400-450
400-450
தூர்களின் எண்ணிக்கை
10-15
30 – 40
30 – 40
இலை தண்டு விகிதம்
-
0.70
0.71
இலை நீளம் (செ.மீ)
110-115
80 – 95
110-115
இலை அகலம் (செ.மீ)
4.5-5.0
3.0 – 4.2
4.0-5.0
தர இயல்புகள்
உலர் பொருட்கள் மகசூல் (டன்/எக்டர்/வருடம்)
47.23
65.12
79.87
புரதச்சத்து (டன்/எக்டர்)
4.65
5.40
8.71
உலர் பொருட்கள் (%)
16.4
17.0
21.3
புரதச்சத்து (%)
9.85
10.5
10.71
ஆக்ஸலேட் (%)
1.50
2.51
2.48

நன்றி! ஆதாரம் : கரும்பு ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி